குட் பேட் அக்லி
அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக அஜித்துடன் நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
கூலி படத்தின் அதிரடி புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு.. லோகேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்
ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து இம்மாதம் இறுதியில் இப்படத்தின் டிரைலர் வெளிவரவுள்ளது. இப்படத்தின் ‘ஓஜி சம்பவம்’ பாடல் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், ‘ஓஜி சம்பவம்’ பாடல் குறித்து ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் தளத்தில் ஹிண்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார். தற்போது, இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
A high voltage ⚡️ELEVATION ⚡️track for the man of the masses #OGSambavam from March 18th .
— G.V.Prakash Kumar (@gvprakash) March 14, 2025