பராசக்தி
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது.
தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி. நடிகர் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்க, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முதலில் பேபி அடுத்து தான் பேப்.. வைரலாகும் நடிகை அமலாபால் வெளியிட்ட வீடியோ
வேற லெவல் அப்டேட்
கடந்த சில நாட்களாக மதுரையில் நடந்துவந்த பராசக்தி படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியமான பகுதிகளின் காட்சிகள் படமாக்கபட்டு வருகின்றன.
இதற்காக மதுரை ரெயில்வே ஸ்டேஷன் மற்றும் டெல்லி போன்று பிரத்யேகமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.