மூக்குத்தி அம்மன் 2
நடிகை நயன்தாரா – இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் ரெஜினா, யோகி பாபு, அபிநயா, கருடா ராம் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை இனியா.. எந்த தொலைக்காட்சி தொடர்?
பட்ஜெட்
இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை ஆரம்பிக்கும் பொழுது ரூ. 55 கோடி பட்ஜெட் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இறுதியில் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 112 கோடியாகியுள்ளது என முத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இதில் நயன்தாரா தனது சம்பளத்தில் பாதி மட்டுமே வாங்கியுள்ளாராம். மீதி சம்பளத்திற்கு பதிலாக, படத்தின் லாபத்தில் பங்கு கேட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.