பவன் கல்யாண்
நடிகர் பவன் கல்யாண், தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டாராக வலம் வருபவர்.
1996ம் ஆண்டு வெளியான Akkada Ammayi Ikkada Abbayi என்ற படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கியவர் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு Bro என்ற படம் வெளியாகி இருந்தது.
அடுத்தடுத்து பவன் கல்யாண் நடிப்பில் 4 படங்கள் லிஸ்டில் உள்ளது. ஆனால் இப்போதெல்லாம் சினிமாவை தாண்டி அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
விபத்து
Anna Lezhneva என்பவரை 2013ம் ஆண்டு 3வது திருமணம் செய்துகொண்ட பவன் கல்யாணுக்கு ஒரு மகன் உள்ளார்.
பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் படித்து வருகிறார். அங்கு அவரது பள்ளியில் தீ விபத்து ஏற்பட அதில் மார்க் ஷங்கரின் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாராம்.