வெளிநாடு வாழ் தனிநபர்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது.
இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வற் பொருந்தும் என்று உள்நாட்டு வருவாய் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரி திருத்தம்
மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி திருத்த சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.