சமந்தா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் சமந்தா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பல வித்தியாசங்கள், அப்பா கமல் குறித்து ரஜினி சொன்ன விஷயம்.. ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்
ஓபன் டாக்
அதில், “என்னுடைய சினிமா கரியரில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புதான் எனக்கு பெரிய பலம்.
காவிரி படத்தின் நாயகன் ராகுல் ரவீந்திரன் நான் நோய்வாய்ப்பட்டு ஒன்றரை வருடம் இருந்த தருணத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் என்னை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறுவார்.
அவர் எனக்கு நல்ல நண்பர் என்பதை தாண்டி, எனக்கு சகோதரர் மாதிரி. என் குடும்பத்தில் ஒருவர் அவர். என்னுடைய ரத்தம்” என்று கூறியுள்ளார்.