ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி வியட்நாமுக்கு (Vietnam) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
வியட்நாம் பயணம்
அத்தோடு, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி அநுர வியட்நாமில் தங்கியிருப்பார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


