தேசிய மக்கள் சக்தி(npp) கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் திடீர் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அந்த கட்சியின் சமந்த ரணசிங்க(samantha ranasinghe) நியமிக்கப்பட உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்டப் பட்டியலில் அடுத்த உயர்ந்த தரவரிசைப் பெற்றவர் இவராவார்.
பாடசாலை அதிபர்
அவர் தொழிலில் ஒரு பாடசாலை அதிபர்.கடந்த பொதுத் தேர்தலில் 41,306 வாக்குகளைப் பெற்றார்.

கோசல நுவான் ஜெயவீரவின் மறைவைத் தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினர் பதவி காலியாக உள்ளதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சமிந்த குலரத்ன இன்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

