கட்டுநாயக்க, சீதுவ, 18வது போஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரணம்
உயிரிழந்தவர் சீதுவை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான தகராறே இதற்குக் காரணம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள வருகிறது.

