முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மண்டப பகுதியில் கொலையாளியை தேடி சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மண்டபம் பகுதியில் கொலையாளியை தேடி சென்ற பொலிஸார் இலங்கைக்கு கடத்துவதற்காக
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள சுறா துடுப்புகள், சுக்கு,
செருப்பு உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(20) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த தினைக்குளம் கடற்கரையில் கடந்த
சனிக்கிழமை(17) இரவு இராமநாதபுரம் சின்ன கடை பகுதியை சேர்ந்த செய்யது
அப்துல்லா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில்..

உடலை கைப்பற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில் செய்யது அப்துல்லா கொலை
செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.

மண்டப பகுதியில் கொலையாளியை தேடி சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Shock Await Police Who Went Searching For Murderer

இதையடுத்து கொலை செய்த நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் செய்யது அப்துல்லா கொலை வழக்கில் தொடர்புடையதாக
சந்தேகிக்கப்படும் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே வசித்து
வரும் ஆசிப் என்பவரின் வீட்டிற்கு திருப்புல்லாணி பொலிஸார் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு
விசாரணைக்காக சென்றுள்ளனர். 

ஆனால் ஆசிப் வீடு பூட்டப்பட்டிருந்ததால் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரை
வழியாக வீட்டிற்குள் சென்ற பொலிஸார் வீட்டின் பின்புறம் இருந்த குடிசையை
சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக கடத்தல் பொருட்கள் அடங்கிய 23
சாக்கு மூட்டைகள் பதுக்கி இருந்தது தெரியவந்துள்ளது.

தலைமறைவாகியுள்ள நபர் 

இதையடுத்து மூட்டைகளை எடுத்து பொலிஸார் சோதனை செய்தபோது அதில் 15 மூட்டைகளில்
சுறா துடுப்புகள் (Shark Fins), 4 மூட்டைகளில் சுக்கு (காய்ந்த இஞ்சி) 4
மூட்டைகளில் செருப்புகள் இருந்துள்ளது.

மண்டப பகுதியில் கொலையாளியை தேடி சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Shock Await Police Who Went Searching For Murderer

23 மூட்டைகளையும் பறிமுதல் செய்த தனிப்பிரிவு பொலிஸார் அதனை மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடல் வழியாக இலங்கைக்கு
கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், சுறா துடுப்புகள் 40 இலட்சம் ரூபாய், அதேபோல் செருப்பு மற்றும் சுக்கு 10 இலட்சம் ரூபாய் என மொத்தமாக
50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,
தலைமறைவான வீட்டின் உரிமையாளர் ஆசிப் என்பவரை தீவிரமாக தேடி வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள ஆசிப் மீது பல்வேறு கடத்தல் வழக்குகள் நிலுவையில்
உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.