நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபைக்கு பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை
இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு சபாநாயகர் பதில் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.