கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ரே கெலி பால்தசார் (Vraie Cally Balthazaar) இருப்பார் என்று வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் லால் காந்த, கொழும்பு மாநகர சபையில் ஏற்கனவே அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளதாகவும், மேயர் நியமனத்தையும் இறுதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேலும், கொழும்பு மாநகர சபைக்கான மேயர் தொடர்பில் சம்பிரதாயங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வெளிவர உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி (NPP) மற்ற அரசியல் பிரிவுகளுடன் கைகோர்த்து அதன் விரிவாக்கத்தைத் தொடரும் என்றும் அமைச்சர் லால் காந்த கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி, பல பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றியதாகவும், எனவே உள்ளாட்சித் தேர்தலும் வேறுபட்டதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

