முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிந்திய ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம்: பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

தென்னிந்திய ஊடகமொன்றில் நடாத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ள மலையகத்தை சேர்ந்த இளம்யுவதி சினேகா பற்றிய செய்திகளும் காணொளிகளும் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

மலையகம் டயகம அக்கரப்பத்தனை சேர்ந்த இளம்யுவதியான சினேகா தென்னிந்திய ஊடகமொன்றில் நடாத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ளார்.

இவரின் முதல் தெரிவுசுற்று பாடல் தொலைக்காட்சியில் வெளியானதிலிருந்தே இலங்கையிலிருந்து பலர் சார்பாக குறித்த யுவதியின் உடைகள் மற்றும் அவர் கூறிய கதைகள் என்பவற்றை விமர்சனத்திற்குட்படுத்தி வருகின்றன.

அனுதாபம் தேடும்படலம்

இதற்கு முன்னரும் இலங்கையை சேர்ந்த இருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்த நிலையிலும், அவர்கள் ஈழத்தை சார்ந்தவர்கள் என்ற போர்வையில் அனுதாபம் தேடும் ஒரு நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி மாறியிருந்தது.

zeetamil

இந்த விடயமும் பேசப்பட்டிருந்தாலும், மலையக இளம்யுவதி சினேகாவின் விவகாரமே பூதாகரமாக வெடித்துள்ளது.

அதற்கு காரணம் குறித்த இளம்யுவதி அணிந்திருந்த உடையும், அவர் நிகழ்ச்சியில் கூறிய காரணமுமாகும்.

ஏனெனில் கடந்த வருடம் இடம்பெற்ற சீசனிலும் மலையகத்தை சேர்ந்த இளம்யுவதியொருவர் கலந்துக்கொண்டார்.

அவரின் திறமைகள் பேசப்படாமல், நிகழ்ச்சியின் TRP காக அனுதாபம் தேடும்படலாமாகவே அதுவும் மாறி முடிந்திருந்தது.

தற்போது இந்த வருடம் மீண்டும் அதேபோல TRPக்காக மலையகத்தின் வறுமையையும், ஈழத்தின் வலியையும் விற்பதை போலுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குறித்த யுவதியின் தந்தை மற்றும தாயார் காணொளியொன்றை வெளியிட்டுள்ளனர்.

வெளியான காணொளி

அதில் குறிப்பிடப்பட்டுள்ளாவது,

எனது மகள் கூறிய அனைத்தும் உண்மையே, நான் பாத்திரங்கள் கழுவி சம்பாதித்தே உழைத்து வருகின்றேன்.

நாங்கள் இன்றும் தீப்பிடித்து கருகிய வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றோம்.

Sri Lankan Girl in South indian music Show

இலங்கை நிகழச்சியில் எனது மகளுக்கு உடைகள் கொடுக்கப்பட்டன.

ஒப்பனைகள் எல்லாவற்றிற்கும் அவர்களே பொறுப்பெடுத்தார்கள்.

உணவுமே கொடுத்தார்கள். ஏன் பேருந்திற்கு கூட அவர்கள் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் என்று கண்ணீருடன் அவர் கூறியுள்ளார்.

யுவதியின் தாயார் கூறுகையில்,

தனது மகள் அவளின் நண்பர்களிடம் உடையையே வாங்கி அணிந்து சென்றுள்ளார்.

தற்போதும் எங்கள் பிள்ளைகளிடம் நல்ல உடைகள் இல்லை.

தயவுசெய்து எனது மகளை தவறாக சித்தரிக்க வேண்டாம்.

இதுதான் எங்கள் நிலை, நாங்கள் பொய் கூறவில்லை.

தவறாக கூற வேண்டாம் , மனவேதனையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.