முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சி.வி.கேவை கைப்பாவையாக்கிய சுமந்திரனின் சூழ்ச்சி: அம்பலப்படுத்திய டக்ளஸ்

சுமந்திரனின் வழிகாட்டலில்தான் சீ.வி.கே.சிவஞானம், தமது கட்சிக்கு ஆதரவு கோரியதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சீ.வி.கே. சிவஞானம் ஈ.பி.டி.பி தலைமையகமான சிறிதர் தியேட்டரில் உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் கூட்டாக இணைந்து ஆட்சியைப் பிடிப்பது பற்றி கலந்துரையாடினார்.

ஈ.பி.டி.பி கூட்டணி

அத்தோடு, தமிழரசு, ஈ.பி.டி.பி கூட்டணியில், வி.மணிவண்ணன் தரப்பும் இணைய விரும்புவதையும் சி.வி.கே சிவஞானம் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, சுமந்திரன் வெளியிட்ட காணொளியில், “சீ.வி.கே. சிவஞானம் என்னிடம் தனது கட்சி தீர்மானம் எதையும் தெரிவிக்கவில்லை.

சி.வி.கேவை கைப்பாவையாக்கிய சுமந்திரனின் சூழ்ச்சி: அம்பலப்படுத்திய டக்ளஸ் | Douglas Exposes Sumanthiran Hidden Political Deal

இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற நாமும் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

எங்களுடன் மணிவண்ணனும் இணைந்து செயற்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, சீ.வி.கே. சிவஞானம் என்னிடம் உதவி கேட்பது இது முதல்முறையல்ல.

கட்சிக்குள் பிரச்சினை

கடந்த உள்ளூராட்சி அதிகாரசபை தவிசாளர் தெரிவு சமயத்திலும் சீ.வி.கே. சிவஞானம் என்னிடம் நல்லூரில் தனது ஆளான தியாகமூர்த்தி வெற்றியீட்ட ஆதரவளிக்குமாறு கேட்டிருந்தார்.

பிற சபைகளிலும் தமிழரசு கட்சியின் பிற பிரமுகர்கள் பேசியிருந்தனர், கடந்த முறை அவர்களை நாம் ஆதரித்திருந்தோம்.

சி.வி.கேவை கைப்பாவையாக்கிய சுமந்திரனின் சூழ்ச்சி: அம்பலப்படுத்திய டக்ளஸ் | Douglas Exposes Sumanthiran Hidden Political Deal

சிறீதரனுக்கு கட்சிக்குள் பிரச்சினையுள்ளதுடன் சிறீதரன், சுமந்திரன் அணிகள் மோதிக்கொள்கிறார்கள் அத்தோடு, அவர்களின் பிரச்சினை உட்கட்சி பிரச்சினை.

கட்சி செயலாளர் சுமந்திரனின் வழிகாட்டல், அனுசரணை, பணிப்புரையின் அடிப்படையில் தலைவர் எமது அலுவலகத்துக்கு வந்திருப்பார்.

தெரியாமல் வந்திருக்க முடியாதுதானே ? எம்மிடம் கட்சித்தலைவர் ஆதரவு கோரிய நிலையில், இதற்கு சிறீதரன் ஆதரவா, சுமந்திரன் ஆதரவா என நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாதுதானே” என அவர் குறிப்பிட்டுள்ளார்.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.