யாழில் (Jaffna) மற்றுமொரு இடத்தில் மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாழ், கற்கோவள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காணிக்குள் இருந்து குறித்த சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணிக்குள் மனித மண்டையோட்டுடன் எலும்புகள் காணப்படுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம், அரியாலை – செம்மணி சித்துபாத்தி மயானத்தில் மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அண்மையில் அடையாளம் காணப்பட்டடு பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

