இந்த பதிவில் 1993ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
ஜெண்டில் மேன்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படம் ஜெண்டில் மேன். முதல் படமே ப்ளாக் பஸ்டர் வெற்றியை ஷங்கருக்கு பெற்று தந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், நம்பியார், மனோரமா, வினீத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


மகள் அதிதி ஷங்கருக்கு கண்டிஷன் போட்ட இயக்குநர் ஷங்கர்.. நடிகை ஓபன் டாக்
திருடா திருடா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கத்தில் உருவான தரமான திரைப்படங்களில் ஒன்று திருடா திருடா. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் இடம்பெற்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களின் மனதை கவந்தவை. இப்படத்தில் பிரசாந்த், ஹீரா, ஆனந்த், அணு அகர்வால், எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கிழக்கு சீமையிலே
மண்சார்ந்த கதைக்களம் யார்தர்த்தமாக மனதை தொடும் வகையில் படம் எடுப்பவர் இயக்குநர் பாரதிராஜா. இவருடைய படைப்பில் தரமான ஒன்று தான் கிழக்கு சீமையிலே. எம். ரத்னகுமார் இப்படத்திற்கு கதை எழுதியிருந்தார். இப்படத்தில் ராதிகா, விஜயகுமார், நெப்போலியன், பாண்டியன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

உழைப்பாளி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – பி. வாசு கூட்டணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றது. கார்த்திக் ராஜா மற்றும் இளையராஜா இசையில் உருவான இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்களின் மனதை கவர்ந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரோஜா, ராதாரவி, கவுண்டமணி, நிழல்கள் ரவி, விசு எஸ்.எஸ். சந்திரன், விஜயகுமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறந்த வீடா புகுந்த வீடா
குடும்பங்களை கவரும் வகையில் படம் இயக்குபவர், இயக்குநர் வி. சேகர். இவர் இயக்கத்தில் வெளிவந்த மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் தான் பொறந்த வீடா புகுந்த வீடா. கதாநாயகனாக சிவகுமார் மற்றும் கதாநாயகியாக பானுப்ரியா நடித்திருந்தனர். மேலும் கவுண்டமணி – செந்தில் கம்போ தான் இப்படத்தில் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இவர்களுடன் வடிவுக்கரசி, கோவை சரளா, குமரிமுத்து, எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் நடிக்க, இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.


விடாமுயற்சி படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
அமராவதி
இன்று உலகளவில் பல லட்சம் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித் குமாரின் முதல் தமிழ் திரைப்படம் அமராவதி. இயக்குநர் செல்வா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு பாலா பாரதி இசையமைத்திருந்தார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து சங்கவி, நாசர், சார்லி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர்.

