முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2004ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படம்.. சிறப்பு பார்வை

2004ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம் வாங்க.

விருமாண்டி

தமிழ் சினிமாவில் வெளிவந்த தரமான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு திரைப்படங்களில் விருமாண்டியும் ஒன்று. மேலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படத்தில் மிரட்டலாக இருக்கும். அனைத்தையும் தாண்டி ஒளிப்பதிவு மற்றும் வசனம் தான் இப்படத்தின் மாபெரும் பலம் ஆகும். உலகநாயன் கமல் ஹாசன் இயக்கி நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அபிராமி, பசுபதி, நெப்போலியன், நாசர், சண்முகராஜா, ரோகிணி என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

2004ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படம்.. சிறப்பு பார்வை | 2004 Best Tamil Movies

ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை.. யார் தெரியுமா, இதோ பாருங்க

ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை.. யார் தெரியுமா, இதோ பாருங்க

கில்லி

விஜய்யின் டாப் 5 திரைப்படங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் கண்டிப்பாக கில்லியும். விஜய்யை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக இப்படம் தான் மாற்றியது. தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இருந்தாலும், இப்படத்தை வித்தியாசமான திரைக்கதையை அமைத்து உருவாக்கியிருப்பார் இயக்குநர் தரணி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

2004ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படம்.. சிறப்பு பார்வை | 2004 Best Tamil Movies

ஆட்டோகிராப்

மனதை வருடும் கதைக்களத்தில் சேரன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் ஆட்டோகிராப். தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த காதல் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். இப்படத்தில் சினேகா, கனிகா, மல்லிகா, கோபிகா ஆகியோர் நடித்திருந்தனர். படம் மாபெரும் வெற்றியடைந்தது. சேரன் என்றால் உடனடியாக அனைவருக்கும் நினைவுக்கு வருவதும் ஆட்டோகிராப் திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சபேஷ் – முரளி மற்றும் பரத்வாஜ் இசையமைத்திருந்தார்கள்.

2004ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படம்.. சிறப்பு பார்வை | 2004 Best Tamil Movies

பேரழகன்

ஒவ்வொரு திரைப்படத்திற்கு வித்தியாசமான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தாலும், தனது தோற்றத்தையே மாற்றியமைத்து கொண்டு நடிக்கும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருடைய கடினமான நடிப்பில் உருவான திரைப்படம் பேரழகன். இப்படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடித்து அசத்தியிருந்தனர். சசி சங்கர் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில், ஜோதிகா, விவேக், மனோரமா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

2004ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படம்.. சிறப்பு பார்வை | 2004 Best Tamil Movies

காதல்

இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் காதல் திரைப்படம். பரத் மற்றும் சந்தியா இருவருடைய திரை வாழ்க்கையிலும் இப்படம் இன்று வரை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஜோஷுவா ஸ்ரீதர் இசையில் உருவான இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

2004ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படம்.. சிறப்பு பார்வை | 2004 Best Tamil Movies

வசூல் ராஜா MBBS

முன்னா பாய் MBBS படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த வசூல் ராஜா MBBS. கதைக்களம் அதுவாக இருந்தாலும், திரைக்கதையை மிகவும் நகைச்சுவையாகவும், தமிழ் ரசிகர்களின் மனதை தொடும் வகையிலும் படத்தை இயக்கியிருப்பார் இயக்குநர் சரண். உலகநாயகன் கமல் ஹாசனின் நகைச்சுவை இப்படத்தில் அல்டிமேட் ஆக இருக்கும். அவர் மட்டுமின்றி அவரை சுற்றியுள்ள பிரகாஷ் ராஜ், கருணாஸ், பிரபு உள்ளிட்ட அனைவரின் நகைச்சுவை காட்சிகளும் பட்டையை கிளப்பும். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

2004ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படம்.. சிறப்பு பார்வை | 2004 Best Tamil Movies

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம்

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம்

7ஜி ரெயின்போ காலனி

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவருடைய படங்கள் ரிலீஸ் ஆன நாட்களை விட, பல ஆண்டுகளுக்கு பின் தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால், ரிலீசான நாளில் இருந்து ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இப்படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் இணைந்து நடித்திருந்தனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் திரை வாழ்க்கையில் டாப் 10 படங்கள் என லிஸ்ட் எடுத்தால், அதில் கண்டிப்பாக இப்படமும் இருக்கும் என்பதில் எந்த ஒரு சதேகமும் வேண்டாம்.   

2004ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படம்.. சிறப்பு பார்வை | 2004 Best Tamil Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.