ஈரான் – இஸ்ரேல் போர் நீடித்து வரும் நிலையில் ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலை ஈரான் வெளிவிவகார அமைச்சர் கண்டித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ஈரான் வெளி விவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி (Seyed Abbas Araghchi) தனது எக்ஸ் (x) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ”இன்று காலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஈரான் எச்சரிக்கை
ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது.
The United States, a permanent member of the United Nations Security Council, has committed a grave violation of the UN Charter, international law and the NPT by attacking Iran’s peaceful nuclear installations.
The events this morning are outrageous and will have everlasting…
— Seyed Abbas Araghchi (@araghchi) June 22, 2025
இந்த மிகவும் ஆபத்தான, சட்டவிரோதமான மற்றும் குற்றவியல் நடத்தை குறித்து ஐ.நா.வின் ஒவ்வொரு உறுப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

