விஜய் சேதுபதி
கடந்த ஆண்டு மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தலைவன் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜூலை 4 – ம் தேதி வெளியாக உள்ளது.


ஜோவிகா காதலிக்க மாட்டாள், நல்ல வேளை காலேஜுக்கு அனுப்பவில்லை.. வனிதா ஓபன் டாக்
ஓபன் டாக்
இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” என் முதல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தபோது இருந்த படபடப்பு, என் மகனுடைய முதல் படத்தின் நிகழ்ச்சியிலும் உள்ளது.
என் மகன் முடிவுகளை அவனே எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய தந்தை என்னை அப்படித்தான் வளர்த்தார்” என்று தெரிவித்துள்ளார்.

