குபேரா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குபேரா. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருந்தார்.
வித்தியாசமான திரைக்கதையில் உருவான இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் நடித்திருந்தனர்.


பாலா ஹீரோவாக நடிக்கும் காந்தி கண்ணாடி படத்தின் Title Glimpse.. வீடியோ இதோ
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், தெலுங்கில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், குபேரா திரைப்படம் உலகளவிலும் தமிழ்நாட்டிலும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இதுவரை ரூ. 132 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 23 கோடியும் வசூலித்துள்ளது.


