முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானிய பிரதமருக்கு நெருக்கடி! ஆளுந்தரப்பு உறுப்பினர்களே எதிர்த்து வாக்களிப்பு

பிரித்தானியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்த முனையும் சமூக கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிக்கொடுப்பனவுகளை மையப்படுத்திய மறுசீரமைப்பு சட்ட மசோதா ஆளுங்கட்சியில் எதிர்ப்பையும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக தமது தரப்பு நாடளுமன்ற உறுப்பினர்களே வாக்களித்து அதனை தோற்கடிக்கலாம் என்ற அச்சத்தில் இறுதிநேரத்தில் அதில் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டு நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு விடப்பட்டமை பிரதர் கெயர் ஸ்டாமருக்கு சவாலான நிலையை உருவாக்கியுள்ளது.

கிளர்ச்சி நிலை

உட்கட்சியில் இந்த மசோதாவுக்கு எதிராக உருவாகிய கிளர்ச்சி நிலையை தவிர்க்க நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்சும் வேலை மற்றும் ஓய்வூதிய அமைச்சர் லிஸ் கெண்டலும் மசோதாவில் இறுதி நிமிட சலுகைகளை வழங்கிய பின்னர் நேற்றிரவு 335 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

பிரித்தானிய பிரதமருக்கு நெருக்கடி! ஆளுந்தரப்பு உறுப்பினர்களே எதிர்த்து வாக்களிப்பு | Party Members Vote Against Uk Prime Minister

எனினும் குறித்த மசோதாவுக்கு எதிராக 260 வாக்குகள் கிட்டியிருந்தன. இதில் 49 வாக்குகள் ஆளும் தொழிற்கட்சி உறுப்பிகர்களின் வாக்குகளாகும், ஆளுந்தரப்பு உறுப்பினர்களில் 18 பேர் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.

ஈழத்தமிழ் பூர்வீக நாடளுமன்ற உறுப்பினரான உமா குமரன் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

ஸ்ராமருக்கு உட்கட்சி நெருக்கடி

பெனிபிற் எனப்படும் நலன்புரி கொடுப்பனவுகளில் வெட்டுகளை செய்வதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் பவுணஸ் தொகை செலவீனத்தை சேமிக்கும் வகையில் புதிய சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டிருந்தது.

பிரித்தானிய பிரதமருக்கு நெருக்கடி! ஆளுந்தரப்பு உறுப்பினர்களே எதிர்த்து வாக்களிப்பு | Party Members Vote Against Uk Prime Minister

ஆனால் தற்போது இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட தளர்வுகள் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்சின் அரசியல் எதிர்காலத்தை தொழிற்கட்சிக்குள் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த விடயம் இன்னொரு புறத்தில் முன்னயை கன்சவேட்டிவ் ஆட்சிக்காலத்தில்
பொறிஸ் ஜோன்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய பிரதமர்கள் எதிர்நோக்கியதைப் போன்ற உட்கட்சி நெருக்கடியை பிரதமர் ஸ்ராமருக்கும் அவரது கட்சிக்குள் உருவாக்கியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.