கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இடமாற்றம்
கடந்த ஜூன் 30ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை எளிதாக்குவதற்காக இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


