இலங்கையின் மிகப் பழைமையான ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் தரமற்றதும் சுகாதாரச் சீர்கேடானதுமான உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் குறித்த ஹோட்டலில் அண்மைக்காலமாக உணவு உட்கொண்டவர்கள் பல்வேறு சுகாதார குறைபாடுகள் மற்றும் வியாதிகளை எதிர்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஹோட்டலின் உணவின் தரம் குறித்து பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், ஹோட்டலின் தரப்படுத்தல் (ரேட்டிங்) வீழ்ச்சியுறத் தொடங்கியிருந்தது.
மாநகர சபை
இந்தநிலையில், கொழும்பு மாநகர சபை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையில் ஹோட்டலின் சமையலறை சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, சமையலறையின் ஒருபகுதியை மூடுமாறு ஹோட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹோட்டல் நிர்வாகம், கொழும்பு மாநகர சபை சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக செயற்பட்டதன் காரணமாக ஹோட்டலின் சமையலறை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

