முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

புதிய இணைப்பு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து.

மகோற்சவ விழாக்கள்

மேலும், கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு | Jaffna Nallur Kandaswamy Kovil Festival 2025

நல்லூர் ஆலய மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறவுள்ளது.

மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட்19ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் , மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று , மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு | Jaffna Nallur Kandaswamy Kovil Festival 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு | Jaffna Nallur Kandaswamy Kovil Festival 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு | Jaffna Nallur Kandaswamy Kovil Festival 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு | Jaffna Nallur Kandaswamy Kovil Festival 2025

முதலாம் இணைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy kovil) ஆலய வருடாந்த மகோற்சவம் நாளையதினம் (29.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஆண்டு தோறும் பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க அலங்காரக் கந்தனின் கொடியேற்றம் இடம்பெறும்.

திருவிழாவை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு ஆலய வீதி விழாக் கோலம் பூண்டுள்ளது.

போக்குவரத்து தடை

நல்லூர் கோவில் வருடாந்த பெருவிழா 2025 ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு | Jaffna Nallur Kandaswamy Kovil Festival 2025

மகோற்சவ திருவிழாக்களின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவும் நடைபெறும்.

அத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் நிகழ்த்தப்படுவதோடு மகோற்சவம் நிறைவு பெறும்.

இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சுற்றுவீதிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்