முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூதூர் பகுதியில் கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

திருகோணமலை  – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை கலப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய
நிலையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம்  இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக
மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று
பிள்ளைகளின் தந்தையான சேகு முகம்மது றம்சூன் (வயது 45) என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கடற்றொழில் நடவடிக்கை

குறித்த நபர் இன்று அதிகாலை களப்புக் கடலுக்கு கடற்றொழில் நடவடிக்கைக்காக சென்றுள்ள
நிலையில் களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில்
காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தொழிலுக்கு சென்ற மற்றுமொரு கடற்றொழிலாளர் ஒருவர் நீரில்
மிதந்த நிலையில் சடலமொன்று கிடப்பதைக் கண்டு மூதூர் பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளார்.

மூதூர் பகுதியில் கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு | Fisherman S Body Recovered In Muttur Area

குறித்த கடற்றொழிலாளரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகை
தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்ட பின்னர், சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் – மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்