முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர

மாலைதீவுக்கான (Maldives) உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நாட்டை வந்தடைந்துள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சின் (Mohamed Muizzu) அழைப்பின் பேரில் அநுரகுமார திசாநாயக்க கடந்த 28ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் நேற்று (30) இரவு நாடு திரும்பினார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாலைதீவு ஜனாதிபதி உட்பட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

அதன்படி, மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொர்பான ஒப்பந்தம் என்பன பரிமாறப்பட்டன.

நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர | President Anura Returns Sl State Visit To Maldives

இந்த ஒப்பந்தங்கள் மாலைதீவு மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகளிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால்‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

இராஜதந்திர உறவுகள்

அத்துடன் நேற்று (30) பிற்பகல் மாலே தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மரக்கன்றொன்றையும் ஜனாதிபதி நாட்டினார்.

நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர | President Anura Returns Sl State Visit To Maldives

இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த வர்த்தக மன்றத்தை சந்தித்து, உரையாற்றியதோடு மாலைத்தீவில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்து கலந்துரையைாடி இருந்தார்.

இந்த விஜயத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் – திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.