முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்ச்செல்வன் படுகொலையில் மகிந்தவின் தந்திரம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்

சிறந்த ராஜதந்திரங்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையாண்டார்.  முப்படைகளையும் ஒன்றிணைத்து செயற்பட வைத்தார். அவ்வாறு யாருக்கும் செய்ய முடியாது. அதன் பிரதிபலனே விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட சம்பவம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மகிந்தவின் ராஜதந்திரம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஈழப் போரின் இறுதித் தருவாய் உக்கிரமடைந்திருந்த போது பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நேரத்தில் போரை நிறுத்தி ஈழமக்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் பெரும் முயற்சி எடுத்தது.

தமிழ்ச்செல்வன் படுகொலையில் மகிந்தவின் தந்திரம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள் | Wimal Weerawansa Mahinda Rajapaksa Gotabaya

அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவை சந்திக்க பல வெளிநாட்டு ராஜதந்திரிகள் வந்தனர். அப்போது வந்த வெளிநாட்டு அமைச்சர்களை எம்பிலிபிட்டியவுக்கு அழைத்துச் சென்றே பேசியனர். அவ்வளவு அழுத்தங்கள் வந்தன, அச்சந்தர்ப்பத்தில் ஐ.நாவின் பொதுச் செயலாளராக இருந்த பான் கீ மூன் இலங்கைக்கு வருவதற்கு தீர்மானித்திருந்த போது மகிந்த  வெளிநாட்டுக்குச் சென்றார்.

ஒரு நாட்டின் அரசாங்கத்தின் தலைவர் இல்லையென்றால்  ஐ.நாவின் பொதுச் செயலாளர் வர மாட்டார் என நினைத்து திட்டம் தீட்டியே மகிந்த  வெளிநாடு சென்றார்.

தமிழ்ச்செல்வன் படுகொலை 

மகிந்த ராஜபக்ச அன்று அவ்வாறே தனது ராஜதந்திரங்களை பாவித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இன்று நாம் சுமூகமாக வாழும் வாழ்க்கை அவர் கொடுத்தது.
நாம் அதற்கு நன்றியுள்ளவர்களாக செயற்பட வேண்டும்.

தமிழ்ச்செல்வன் படுகொலையில் மகிந்தவின் தந்திரம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள் | Wimal Weerawansa Mahinda Rajapaksa Gotabaya

யுத்தத்தில் முப்படைகளையும் ஒன்றிணைத்து செயற்பட வைத்தார்.  அவ்வாறு யாராலும் செய்ய முடியாது. அதன் பிரதிபலனே தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டது.
ஆகையால் தமிழ் டயஸ்போராக்களுக்கு ஒரு தாகம் இருக்கிறது. கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவை வலுவிழக்க செய்ய வேண்டும்.

அவை நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு ராஜபக்சர்களுடன் அவர்களுடன் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டை நாம் நேசிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.