அச்சுவேலி – பத்தமேனி வடபத்திர காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்
இன்று இடம்பெற்றது.
பக்தர்கள் புடைசூழ வடபத்திர காளி அம்மாள் காலை 9.30 மணியளவில் தேரேறி வீதிவலம்
வந்தாள்.
அம்பாளுக்கு திருச்சொரூப அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டப
பூசைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து அம்பாள் தேரேறி வீதியுலா வந்து, பூசை வழிபாடுகள்
இடம்பெற்றன.









