முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துன்புறுத்தலுக்குள்ளான பெண் நாடாளுமன்ற அதிகாரியிடம் வாக்குமுலம் பதிவு

நாடாளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவத் துறையில் பணிபுரியும் சில பெண் அதிகாரிகள் மீதான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெரும தலைமையிலான குழு, அதன் முதல் கட்டமாக திங்கட்கிழமை (11) முறைப்பாடு அளித்த அதிகாரியிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அன்றைய தினம் குறித்த அதிகாரியிடம் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டு, அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகரிடம் சமர்ப்பிக்க உள்ள அறிக்கை

மேலும் சுமார் பதினேழு ஆண்டுகளாக அவர் அனுபவித்ததாகக் கூறப்படும் துன்புறுத்தல் தொடர்பான பல ஆதாரங்களை அவர் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துன்புறுத்தலுக்குள்ளான பெண் நாடாளுமன்ற அதிகாரியிடம் வாக்குமுலம் பதிவு | 5 Hr Testimony From Assaulted Parliament Employee

விசாரணைக் குழு அந்த அதிகாரியை மேலும் விசாரிப்பதற்கு 25 ஆம் திகதி மீண்டும் கூட உள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த கட்டத்திற்குப் பிறகு, இந்த துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பல நாட்கள் விசாரணைகளை நடத்திய பிறகு, ஓய்வுபெற்ற நீதிபதி சுஜாதா தனது இறுதி அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்