தமிழ் மக்களை இனவாதத்துக்குள் அழைத்து சென்று கதவடைப்பு போராட்டம் என்று நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு எதிராகவே நாங்கள் செயற்பட உள்ளோம் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”தேங்காய் சிதறுவதை போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதற வேண்டும். காரணம் மோசமான அரசியல் செய்யும் சுமந்திரனும் சாணக்கியனும் அழிந்தால் தான் இந்த நாடும் மக்களும் செழிப்பாக வாழ முடியும்.
இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவதற்கும் இன வாதத்தை உருவாக்குவதற்காகவும் மட்டுமே இந்த கதவடைப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
எனவே நாங்கள் இந்த நிகழ்வுக்கு எதிராகவே செயற்படுவோம்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ள முழுமையான கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,

