எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது அமைச்சர் பதவியில் இருந்து விரைவில் விலக தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கின் தீர்ப்பு
கடந்த நல்லாட்சிக் காலத்தில் இடம்பெற்ற பசளை டெண்டர் மோசடியொன்று தொடர்பில் அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கான ஆணைக்குழு வழக்கொன்றைப் பதியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டால் உடனடியாக அமைச்சுப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக அமைச்சர் குமார ஜயகொடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், வழக்கொன்றைப் பதிவு செய்த உடன் பதவியில் இருந்து விலகவது மோசமான முன்னுதாரணமாகி விடும் என்பதால் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை பொறுமையுடன் இருக்குமாறு ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

