முன்னாள் ஜனாதிபதி ரணில், மலிக் சமரவிக்கிரவை வைத்து நடத்திய சூழ்ச்சி அவருக்கே வினையாக மாறும் என அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணி கைது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி – ரணில் கூட்டணி
அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நான் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இருந்த போது புதிய உறுப்பினராக நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்கு சென்று குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்த போது எனக்கு தெரிந்த சிரேஷ்ட அமைச்சர்கள் அந்த இடத்தில் உட்கார வேண்டாம். அதில் ஜே.பி.வி உறுப்பினர்கள் மூவருக்கானது என்றார்.

நானும் வேறு மேசையில் அமர்ந்து அதை அவதானித்தேன். அப்போது அநுரகுமார திசாநாயக்க, விஜித ஹேரத் ,சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் அமர்ந்தனர்.
அதன் பின்னர் அவர்களுடன் மலிக் சமரவிக்கிரவும் வந்தமர்ந்து நீண்ட கால நண்பர்கள் போல் கதைத்து பேசினார்.
நாடாளுமன்றில் நீண்ட காலம் இருப்பவர்கள் ஒரே மேசையில் அமர்வது வழமையாகும்.
இன்று கூட மலிக் சமரவிக்கிரம அரசாங்கத்தில் தொடர்புபட்டுள்ளார் என்றவாறான கதைகள் வெளிகிளம்பி உள்ளன.
நெருப்பிலாமல் புகையாது என்பார்கள்.கடந்த சம்பவங்களை உற்று நோக்கினால் உண்மை புரிந்து விடும்.
மலிக்கின் ஜே.வி.பியுடனான நீண்ட நட்பு தன்மை பாதுகாக்கும் என தப்பு கணக்கு போட்டுவிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தெறிந்து விட்டு
மலிக் தேசிய மக்கள் சக்திக்கு உதவி செய்திருக்கலாம். இப்போது அவர்களுக்கு அவர் தேவையில்லைதானே.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால்.ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது தானே சம்பிரதாயமாகும்.

ஜனாதிபதி தேர்தலில் கூட சஜித்தை தோற்கடிப்பதிலேயே ரணில் செயற்பட்டார்.
அநுர தனது நண்பர் என்று குறிப்பிட்ட அவர், அநுர வெற்றிபெறுவார் என்று கூறினார்.ரணில் விக்கிரமசிங்க டீல் அரசியல் சதுரங்க விளையாட்டில் முன்னிலை வகிப்பவர். அவரின் சூழ்ச்சி அரசியலில் தப்பு நடந்த இடமாக நான் இதை கருதுகிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தெறிந்து விட்டு அரசியலில் பாதுகாப்பாக இருந்தார். நாடு வங்குரோத்தான போதும் அவரின் அரசியல் நிலைத்தது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அவருக்கு ஏற்பட்ட பாதகம் அரிதாகவே இருந்தது.
அவர் எடுத்த அனைத்து தவறான தீர்மானங்களிலும் விலகி சென்ற அவருக்கு, இது பாதகமாக அமைந்தது என நான் நினைக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

