காசா (Gaza) நகரை ஆபத்தான போர் மண்டலமாக இஸ்ரேல் அறிவித்துள்ளதை அடுத்து, பலஸ்தீனத்தின் மிகப்பெரிய நகரை கையகப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் (29.08.2025) உள்ளூர் நேரப்படி 10 மணி முதல் இராணுவ நடவடிக்கைகளில் உள்ளூர் அழுத்தங்கள் எதுவும் காசா நகரப் பகுதிக்குப் பொருந்தாது என்றும், காசா நகரமானது ஆபத்தான போர் மண்டலமாக அறிவிக்கபப்டுவதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்க அவ்வப்போது இராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும். அப்படியான நடவடிக்கைகள் இனி நடைமுறைக்கு வராது என்றே இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
ஹமாஸ் கோட்டை
மேலும், காசா நகரம் தவிர்த்து எஞ்சிய பகுதிகளில் உதவிகள் முன்னெடுக்க அனுமதிக்கப்படும் என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காசா நகரத்தைக் கைப்பற்றும் இஸ்ரேல் இராணுவத்தின் திட்டம் பொதுமக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என மனித உரிமைகள் குழுக்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், எஞ்சியுள்ள ஹமாஸ் கோட்டைகளை குறிவைத்து நடத்தப்படும் விரிவாக்கப்பட்ட தாக்குதலை ஏற்க முடியாது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.