விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். மீனா பணம் கொடுத்தது அவரது அப்பா அம்மாவுக்கு தெரியவந்தது, இதுவரை வில்லனாக இருந்த குமரவேல் திடீரென மனம் மாறி திருமணம் வேண்டாம் என சொன்னது என கடந்த வாரம் பல சம்பவங்கள் சீரியலில் நடந்தது.
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

டான்ஸ் போட்டிக்கு சென்ற ராஜி
கதிர் தொழில் தொடங்க பணம் வேண்டும் என்பதற்காக ராஜி சென்னையில் நடக்கும் டான்ஸ் போட்டிக்கு செல்ல போவதாக கூறுகிறார். ஆனால் பாண்டியன் அதை வேண்டாம் என கண்டிக்கிறார்.
ஆனால் ராஜி அவரது பேச்சை மீறி கிளம்பி சென்னைக்கு செல்கிறார். அங்கு அவர் ஆடிஷனில் கலந்துகொண்டபோது ஒரு டான்ஸ் மாஸ்டர் தகாத வகையில் நடந்து கொள்கிறார்.
அதனால் கலங்கும் ராஜி உடனே கதிருக்கு போன் செய்கிறார். ஆனால் எதுவும் சொல்ல முடியாமல் தவித்து நிற்கிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.

