41.65 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாகவும், கடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு இன்று (04) கொழும்பு உயர் நீதிமன்றம் மரண் தண்டனை விதித்தது
டோனா கம்மன்பில என்ற பெண்ணுக்கே உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவேத முன்னிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஹெரோயின் தொகையுடன் கைது
கடந்த 2019 பெப்ரவரி 27ஆம் திகதி, மாளிகாவத்தை காவல்துறை பிரிவு பகுதியில் இந்தப் பெண் ஹெரோயின் தொகையுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அரச தரப்பு வழக்கறிஞரால் இந்தப் பெண்ணுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள், நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

