இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்
போது 5 ஆயிரத்து 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும்
கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை நேற்று மேற்கொண்டுள்ளனர்.
அதிரடி நடவடிக்கை..
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள்
தொடர்பில் ஆதாரங்களுடன் 724 பேரும், சந்தேகத்தின் பேரில் 26 பேரும், பிடியாணை
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 269 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், திறந்த பிடியாணை உத்தரவு
பிறப்பிக்கப்பட்ட 195 பேரும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில்
44 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 9 சாரதிகளும் கைதாகியுள்ளனர்.
அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3 ஆயிரத்து 900 பேரும் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

