தனக்கும் தமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வமாக
ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தேவையில்லை எனக் கூறி, அந்த மூன்று வாகனங்களையும்
சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்ட அவர், நாட்டின் சுகாதார
சேவைகளை வலுப்படுத்தும் ஒரு நல்லெண்ண முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக
குறிப்பிட்டார்.
ஒதுக்கப்பட்ட வாகனங்கள்
ஜனாதிபதி நான்கு மணி நேரம் முப்பது நிமிடங்கள் வரவு செலவுத் திட்ட உரையை
வழங்கியதாகவும், அடுத்த ஆண்டும் அதே உரையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் நாமல்
ராஜபக்ச கூறினார்.

அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பொதுமக்கள்
வழி கெடுக்கப்படுவதாக அவர் விபரித்தார்.
இத்தகைய நடவடிக்கைகளை அம்பலப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.
நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பாக எதிர்க்கட்சிகள்
அனைத்திடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்துக் கட்சிகளும்
அதில் பங்கேற்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

