இந்தியாவின் புனேவில் இரண்டு கனரக வாகனங்களுக்கு இடையில் கார் சிக்கி பயங்கர விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு நடவடிக்கை
புனேவின் நவேல் பாலம் பகுதியில் நடந்த விபத்து தொடர்பான காணொளயில், ஒரு கனரக வாகனம் தீப்பிடித்து எரிவது தெரிகிறது, அதே நேரத்தில் புகைப்படங்களில் கனரக வாகனங்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட சிதைந்த காரைக் காட்டுகின்றன.
#Pune, Nr. Navale Bridge🚨⚠️
Horrific Incident🚨
News says lorry lost control, rammed multiple vehicles + car crushed b/w 2 lorries. 7 dead, 15 injured…
Lorries brake failed?@DriveSmart_IN @abhi_kulkarni85 @sss3amitg @InfraEye
pic.twitter.com/DvLYhX0S7g— Dave (Road Safety: City & Highways) (@motordave2) November 13, 2025
விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
குடும்பங்களுக்கு இழப்பீடு
இதேவேளை, இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

