முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் அகதிகளின் நிரந்தர வதிவிட விசாவுக்கு முடிவு: இலங்கையருக்கும் அபாயம்!

பிரித்தானியாவில் அகதிகளுக்கான நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த விடயத்தை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வரும் திங்கட் கிழமை நாடாளுமன்றில் அறிவிப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியேற்ற பிரச்சனை  

பிரித்தானியாவில் அதன் குடியேற்ற பிரச்சனை கட்டுப்பாட்டை மீறிச்சென்றுவிட்டதை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் அமைச்சர் ஒப்புகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் அகதிகளின் நிரந்தர வதிவிட விசாவுக்கு முடிவு: இலங்கையருக்கும் அபாயம்! | Permanent Govt Residence Visa For Refugees In Uk

இந்தநிலையில், இனிமேல் அகதி தஞ்சம் அங்கீகரிக்கப்பட்ட ஒருவருக்கும் அவரது சொந்த நாடு பாதுகாப்பானது எனக்கருதப்படும் போது, அவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை எழுந்துள்ளதாக சுட்டிக்காடா்டப்பட்டுள்ளது.

குடியுரிமை 

இதனடிப்படையில், அகதி தஞ்சங்களை இனிமேல் தற்காலிகமாகவே வழங்க முடிவு எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானியாவில் அகதிகளின் நிரந்தர வதிவிட விசாவுக்கு முடிவு: இலங்கையருக்கும் அபாயம்! | Permanent Govt Residence Visa For Refugees In Uk

இதனால் இனி மேல் அகதிகள் நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை ஆகிய நிலைகளை எட்டுவதற்கு கடும் கட்டுபாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் புதிய வாழ்க்கையைத் தேடுவதற்காக ஆங்கிலக் கால்வாயை சட்டவிரோதமாகக் கடக்கும் குடியேறிகள் உட்பட அனைத்து ஏதிலிகளுக்கும் இனிமேல் நிரந்தரமாக பிரித்தானியாவில் வசிக்கும் திட்டங்களுக்குரிய சகாப்தம் முடிந்துவிட்டது என்பதை குறிக்கும் வகையில் புதிய நடைமுறைவரவுள்ளதால் இந்த நடைமுறையில் இலங்கை அகதிகளும் பாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குடியேறிகள் 

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிட்டத்தட்ட 50,000 சட்டவிரோத குடியேறிகள் பிரிதானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் அறிவித்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.

பிரித்தானியாவில் அகதிகளின் நிரந்தர வதிவிட விசாவுக்கு முடிவு: இலங்கையருக்கும் அபாயம்! | Permanent Govt Residence Visa For Refugees In Uk

புதிய முறையில் இனி அகதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்படும் அந்த காலம் முடிந்ததும் குறித்த ஏதிலிகள் மீண்டும் தமக்குரிய புகலிட அனுமதியை கோர வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல பல முறை நீட்டிப்பு பெற்றவர்கள் பிரித்தானியான குடியுரிமையை பெறும் முறையும் கடினமாக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.