முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராஜபக்சர்களின் இனவாதத்திற்கு எதிராக பொங்கியெழும் மற்றுமொரு சிங்கள இனவாத தேரர்

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் முழுமையாக திட்டமிட்ட இனவாத செயற்பாடு இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரருக்கு நெருங்கிய தொடர்புள்ளது. கஸ்ஸப தேரர் முழுமையான இனவாதி எனவும் சாடியுள்ளார்.

கஸ்ஸப தேரருக்கு பணம் கொடுத்தால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒருவர் என சத்தாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக பேரணி

கஸ்ஸப தேரர் தலையிடும் விடங்களில் குழப்பங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாகும். அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி அரசுக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

ராஜபக்சர்களின் இனவாதத்திற்கு எதிராக பொங்கியெழும் மற்றுமொரு சிங்கள இனவாத தேரர் | Buddha Statue In Trincomalee Is A Racist Incident

இந்த பேரணி, சமகால அரசாங்கத்தை கவிழ்க்க நாமல் ராஜபக்சவினால் முன்னெடுக்கும் செயற்பாடாகும் என்றும் சத்தாரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலைக்கு அடுத்தடுத்து தேரர்கள் செல்கின்றார்கள். ஞானசார தேரரும் சென்றார். அப்படி என்றால் ஏதோ ஒரு பிர்ச்சினை உள்ளதென அனைவருக்கும் தெரியும்.

இனவாத செயற்பாடு

தவறான விடயங்களுக்கு நாங்களும் எதிர்ப்பு தான். அரசாங்கத்தை கவிழ்க்க இந்த மோசடியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

ராஜபக்சர்களின் இனவாதத்திற்கு எதிராக பொங்கியெழும் மற்றுமொரு சிங்கள இனவாத தேரர் | Buddha Statue In Trincomalee Is A Racist Incident

அதற்கான இனவாதம் மதவாதம் தூண்டப்படும் என நான் பயமின்றி கூறுவேன்.

இந்த மோசடி செயற்பாடுகளில் ஏமாற வேண்டாம் என நான் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

போதை பொருள் கடத்தல்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள், திருடர்களால் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்