முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் எரிபொருள் விலைகளில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்த்துள்ளதால் அது இலங்கை எரிபொருள் விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் 117 கப்பல்கள் மீது விதிக்கப்பட்ட தடைகள் இதற்கு பெரும் காரணமென கூறப்படுகிறது.

17 சுத்திகரிப்பு நிலையங்கள்

மேலும், உக்ரைனின் 17 ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடந்த ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யா எரிபொருள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளது. இது உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலைகளில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! | Major Impact On Fuel Prices In Sri Lanka

ஐரோப்பாவில் குளிர்காலம் வருவதால் கடந்த இரண்டு வாரங்களில் டீசல் விலை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல், விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளும் அதிகரித்து வருகின்றன.

விதிக்கப்பட்டுள்ள தடைகள்

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு மேலதிகமாக, 19ஆவது பெகேஜ் என்று அழைக்கப்படும் சீனா உட்பட ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையில் எரிபொருள் விலைகளில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! | Major Impact On Fuel Prices In Sri Lanka

இந்தத் தடைகளுக்கு மத்தியில் ஜிபிஎஸ் சேவைகளை முடக்கி ரஷ்யாவிலிருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு (SHADOW SHIPS) ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

அந்தக் கப்பல்கள் ரஷ்யாவிலிருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் போது இறக்குமதி செய்யும் நாடுகளை மாற்றி எரிபொருளை கொண்டு சென்றுள்ளன. அவ்வாறு சென்றாலும் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

கப்பல் கட்டணம் அதிகரிப்பு

இந்த சூழ்நிலையில், அந்தக் கப்பல்கள், ரஷ்யாவிலிருந்து எரிபொருளைக் கொண்டு செல்வதையும் தவிர்த்துள்ளன. இதனால் கப்பல்கள் மூலம் எரிபொருள் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் எரிபொருள் விலைகளில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! | Major Impact On Fuel Prices In Sri Lanka

அதனால் கப்பல் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
இவையும் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கூடும்.

எரிபொருள் இறக்குமதியைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினைகள் காரணமாக, இந்த மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.