டித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையின் புவிசார் மூலோபாய இருப்பிடம் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில் அமெரிக்காவின் சுப்பர் ஹெர்குலிஸ் வான்கலம் பலாலிக்கு அடிக்கடி பறந்து வருகிறது.
இவ்வாறான பின்னணியில் பலாலியில் பெரிய பயணிகள் விமானங்களும் தரையிறங்காது என இந்தியா பொய்கூறியதான ஒரு பேசுபொருள் சமுக ஊடகங்களில் உருவாகியுள்ளது.
எனினும், யதார்த்தமாக நோக்கினால் வடக்கின் பலாலி முதல் தெற்கின் மத்தள வரை தற்போது பறந்து இறங்கும் பாரிய சுப்பர் ஹெர்குலிஸ் போன்ற சரக்கு விமானங்கள் அளவில் பெரியவையாக இருந்தாலும் அவை குறுகிய ஓடுபாதைகளை பயன்படுத்தி ஏறி இறங்கும் வகையில் சிறப்பு வடிவமைப்புகளுக்கு உரியன.
இதனால் சரக்கு விமானங்களின் இயக்க முறைகளுக்கும் பயணிகள் விமானங்களின் செயற்பாடுகளுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த விடயங்களை தாங்கி வருகின்றது இன்றைய செய்திவீச்சு…..
https://www.youtube.com/embed/QsbSmJcKEDc

