யாழில் பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக
உயிரிழந்துள்ளது.
அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் நிருஜா என்ற
தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குடல் இறக்கம் காரணமாக
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை கடந்த 9ஆம் திகதி மந்திகை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
பின்னர் அன்றையதினமே தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டனர்.
குடல் இறக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
