Home இலங்கை சமூகம் தேங்காய் தலையில் விழுந்ததில் பச்சிளம் குழந்தை பலி

தேங்காய் தலையில் விழுந்ததில் பச்சிளம் குழந்தை பலி

0

கண்டி(Kandy) காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட  பிரதேசத்தில் 11மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கண்டி, கலஹா தெல்தோட்டை நாராஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தெல்தோட்டை நாராஹின்ன தோட்டத்தில் வசிக்கும் லோகேஸ்வரன் என்பவர் தனது, 11மாத கை குழந்தையுடன் அந்த பகுதியில் இருக்கும் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த சந்தரப்பத்தில் நண்பர் வீட்டுக்கு அருகில் இருந்த தேங்காய் மரத்தில் உள்ள தேங்காய் ஒன்று குறித்த குழந்தை மீது வீழ்ந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி

இதனால் குழந்தையின் தலை பகுதியில் காயங்கள் ஏற்ப்பட்ட நிலையில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் அங்கு இருந்து உடனடியாக பேராதனை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

எனினும் பேராதனை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கலஹா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Source: https://ibctamil.com/article/a-child-died-when-a-coconut-fell-on-his-head-1718612999

NO COMMENTS

Exit mobile version