முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளருக்கு நினைவேந்தல்

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் யுத்த சூனிய பகுதிக்குள் இலங்கை இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நினைவு கூறப்பட்டுள்ளார்.

போர்க்காலச் சூழ்நிலைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக அறியப்படும் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கட்சியின் யாழ். அலுவகலத்தில் இடம்பெற்றுள்ளது.

அதன் போது புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு

இறுதிகட்ட போர்க்காலம்

ஆரம்பத்தில தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றியதோடு, பின்னர் ஈழநாதம் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு ஆய்வுக் கட்டுரைககளையும் சத்தியமூர்த்தி எழுதியுள்ளார்.

யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளருக்கு நினைவேந்தல் | A Commemoration Event For A Tamil Journalist

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிகட்ட போர்க்காலத்தின் பெப்ரவரி மாதத்தில், முல்லைத்தீவில் இலங்கை இராணுவம் எறிகணைத் குண்டுத் தாக்குதல்களை நடத்திய போது, யுத்த சூனிய பகுதிக்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் காயமடைந்தார்.

இந்நிலையில், சத்தியமூர்த்தி உடனடியாக உயிரிழக்கவில்லை எனவும், முறையான வைத்திய சிகிச்சை அளிக்கப்படாமையே அவரது மரணத்திற்கு காரணம் எனவும் உறவினர்களை மேற்கோள்காட்டி தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பாண்டிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

பாண்டிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

யுத்த சூனிய வலயங்கள்

ஊடகவியலின் தரங்களைப் பேணியதோடு, போர்க்காலச் சூழ்நிலைச் செய்திகளை அவர் வெளிப்படுத்தியதாகவும், அவரது பணி போரின் பாதிப்புக்களை எடுத்துரைத்ததோடு, வெளிநாடுகளில் வாழும் ஏராளமான தமிழர்களை சென்றடைந்ததாகவும், ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு (CPJ) தெரிவிக்கின்றது.

யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளருக்கு நினைவேந்தல் | A Commemoration Event For A Tamil Journalist

போரின் இறுதி மாதங்களான, 2009 ஜனவரி முதல் மே வரையில் மூன்று யுத்த சூனிய வலயங்களை இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டு, இந்த பிரதேசங்களில், சுமார் 300,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கூடுமாறு படையினர் அறிவித்திருந்தனர்.

எனினும், அரசால் யுத்த சூனிய வலயங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளும் வான்வழித் தாக்குதல்களும், ஷெல் தாக்குதல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு

தனது பிரித்தானிய குடியுரிமை உண்மையை மறைத்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

தனது பிரித்தானிய குடியுரிமை உண்மையை மறைத்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்