நாட்டில் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பம் முதல் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட காவல்துறை
விசேட காவல்துறை பாதுகாப்பு
யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் பின்னர் அநேகமான நகரங்களில் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அனுரதபுரம் காவல்துறை பிரிவிட்குட்பட்ட
பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் வைத்து 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடமிருந்து 40 கிரேமும் 250 மில்லிகிரேம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் அனுராதபும் காவல்துறையினர் மேலதிக விசாரணைனகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/a-decline-in-the-drug-trade-1719165500
