Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படவுள்ள ஆபத்து!

இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படவுள்ள ஆபத்து!

0

உலகளாவிய வர்த்தகப் போரினால் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படும் பேரழிவு
தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர்
எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 59வது அமர்வின், ஆரம்ப நிகழ்வில் பேசிய
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இந்த
எச்சரிகையை விடுத்துள்ளார்.

  

அமெரிக்காவினால், அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள், சக்தி குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளைத் தாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி துறை

இது, இலங்கை, கரீபியன் நாடுகள்,பங்களாதேஷ், கம்போடியா,மற்றும் வியட்நாம்
உள்ளிட்ட ஏற்றுமதித் துறைகளைக் கொண்ட நாடுகள் மீது பேரழிவை ஏற்படுத்தும்
என்றும் அவர் கூறியுள்ளார்.

   

அதிக வரிகள் என்பது, சுகாதாரம், கல்வி மற்றும் சத்தான உணவை பலருக்கு
எட்டாததாக மாற்றக்கூடும்.

அத்துடன், வரிகள், குறைந்த ஊதியம் பெறும் உற்பத்தி வேலைகளில் பணிபுரியும்
பெண்கள் மீது அதிக விகிதாசார தாக்கத்தை ஏற்படுத்துவதால், பாலின சமத்துவத்தின்
மீதான இலாபத்தையும் குறைக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version