Home இலங்கை சமூகம் படகு கவிழ்ந்ததில் தந்தையும் மகளும் மாயம் – 5 பேர் மீட்பு

படகு கவிழ்ந்ததில் தந்தையும் மகளும் மாயம் – 5 பேர் மீட்பு

0

நீர்கொழும்பு முன்னக்கரை குளம் பகுதியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 7 பேர் நீரில் மூழ்கியுள்ளனர், அவர்களில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

மருத்துவமனையில் சிகிச்சை

50 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 உயிர் பிழைத்த 5 பேரில் இருவர் மருத்துவமனையில்e சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version