Home இலங்கை சமூகம் பதினைந்து வயதுடைய மாணவன் மாயம்

பதினைந்து வயதுடைய மாணவன் மாயம்

0

கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் வசிக்கும் பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பாடசாலைக்குச் சென்ற குறித்த மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று மாணவனின் தாயார் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலதிக விசாரணைகள்

கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் வசிக்கும் குறித்த மாணவன்  நேற்று (12) காலை 6.00 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்றதாகவும் அதன் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version