Home இலங்கை சமூகம் கடுவலையில் தொழிற்சாலையில் தீவிபத்து! ஏற்பட்டுள்ள பாரிய சேதம்..

கடுவலையில் தொழிற்சாலையில் தீவிபத்து! ஏற்பட்டுள்ள பாரிய சேதம்..

0

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவியுள்ளது.

குறித்த சம்பவம் இன்றையதினம்(19) இடம்பெற்றுள்ளது.

 பாரிய சேதம் 

இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான தீயணைப்பு படையினர் இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேதம் தொடர்பான மதிப்பாய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version